என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் போலீஸ் தற்கொலை முயற்சி"
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் பாளை போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் மகேஷ்வரி(வயது 45). இவரது கணவர் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு பாளை வ.உ.சி. மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழா நிகழ்ச்சியின்போது போலீஸ் அணிவகுப்பை தலைமையேற்று நடத்தினார். அதற்கு முந்தைய நாள் வடமதுரையில் வசித்து வந்த அவரது தந்தை இறந்துவிட்டார்.
ஆனால் அதற்கு செல்லாமல் மனவலிமையுடன் அணிவகுப்பை முடித்த பின்னரே தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க அவர் சென்றார். அவரது கடமை உணர்வை கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
இந்நிலையில் நேற்று மகேஷ்வரி, வீட்டில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகேஷ்வரி பாளை பகுதியில் திறமையாக செயல்பட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி வருகிறார் என்று போலீஸ் தரப்பில் பாராட்டு பெற்றுள்ளார்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பணியில் இருந்தபோது மாநகர பகுதியில் கனரக வாகனங்கள் விதிகளை மீறி வந்ததாகவும், அதனை அவர் கவனிக்க தவறிவிட்டார் எனவும் கூறி உயர் அதிகாரிகள் அவரை கண்டித்துள்ளனர்.
மேலும் அவருக்கு மெமோ வழங்கி சம்பள பிடித்தம் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இன்ஸ்பெக்டர் ஒருவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் லைன்மேடு மாநகர ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன், (வயது 30). இவரது மனைவி சூர்யா(25). 2 பேரும் சேலம் மாநகர ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார்கள். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இருவரும் போலீஸ் பணியில் இருப்பதால் குழந்தையை கவனிக்க முடியாது என்று கருதி, புதுக்கோட்டையில் உள்ள சூர்யாவின் பெற்றோர் வீட்டில் விட்டனர். அவர்களது பராமரிப்பில் குழந்தை அங்கு வளர்ந்து வருகிறது.
கடந்த 14-ந்தேதி மோகனுக்கும், சூர்யாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த மோகன், குமாரசாமிபட்டி பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் தனது தந்தை ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று விட்டார். அவரும் போலீசாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி புதிய ஆடைகள் எடுக்க நேற்று சூர்யா, மோகனை அழைப்பதற்காக குமாரசாமிபட்டி பகுதியில் உள்ள காவலர் குடியிருப்புக்கு சென்றார்.
அப்போது அங்கு வீட்டில் இருந்த மோகனிடம், குழந்தைக்கும், நாம் இருவருக்கும் புதிய துணிகள் எடுக்க வேண்டும். என்னுடன் ஜவுளிக்கடைக்கு வாருங்கள் என அழைத்தார்.
அதற்கு மோகன், நீ இங்கிருந்து போய் விடு, நான் உன்னுடன் வரமாட்டேன் என கூறினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மோகன் அவரை திட்டிவிட்டதாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த சூர்யா நேராக லைன்மேட்டில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொசு மருந்தை எடுத்து குடித்தார். மயங்கி கிடந்த அவரை, அக்கம், பக்கத்தில் குடியிருப்பவர்கள் பார்த்து மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சூர்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸ் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அவருடன் ஆயுதப்படையில் பணியாற்றும் சக பெண் போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்தவர் ஓவியா (வயது22). இவர், திருவண்ணாமலை ஆயுதபடை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் குமரேசன். இவரும் விழுப்புரம் ஆயுதபடை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிகிறார்.
ஓவியா திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து உறவினர்களுடன் வசித்து வருகிறார்.
நேற்று வீட்டில் தனியாக இருந்த ஓவியா கத்தியால் தனது கையை கிழித்துக் கொண்டு மயங்கி கிடந்தார். வெளியே சென்றிருந்த உறவினர்கள் வீட்டிற்கு வந்ததும் ஓவியாவை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை கிழக்கு போலீசார் மருத்துவமனைக்கு சென்று ஓவியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுதபடை பெண் போலீசாரான ஓவியா கடந்த 2017-ம் ஆண்டு போலீஸ் பணிக்கு சேர்ந்து அடிப்படை பயிற்சிகளை முடித்தவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் திருவண்ணாமலை ஆயுதபடை பிரிவுக்கு பணி மாறுதலாகி வந்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில் பெண் போலீஸ் தற்கொலைக்கு முயற்சி மேற்கொள்ள பணிச்சுமை காரணமா? அல்லது குடும்ப பிரச்சனையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
கடலூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சத்தியசீலன், ஆயுதப்படை போலீஸ்காரர். இவரது மனைவி கவிதா (வயது 27). இவர் கடலூர் ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.
இன்று காலை வேலையை முடித்துவிட்டு கவிதா வீட்டுக்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த கவிதா திடீரென விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கவிதாவின் உறவினர்கள் கூறும்போது, பணிச்சுமை, தொடர் வேலைகாரணமாக கவிதா மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கவிதா தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றனர்.
இதுகுறித்து புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்